புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஆண்டு ஜூலை 20ஆம் தேதி நடந்தது. அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி 2020- 21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இன்னும் மூன்று மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நேற்று (ஜன. 15) நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை வருகிற 18ஆம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று (ஜன. 16) சட்டப்பேரவை செயலர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் 18ஆம் தேதி காலை 10. 15 மணிக்கு சட்டப்பேரவை கூடும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்தும் இதில் மேற்கொள்ள வேண்டிய அலுவல்கள் குறித்தும் சபாநாயகர் தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிகிறது
இதையும் படிங்க... வாக்குக்கு 'மது, பணம், இலவசம்' இல்லாத தேர்தல் நடத்த முடிவு - தேர்தல் ஆணையம்