புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக-அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 14 தொகுதிகளில் 9 தொகுதிகளில் பாஜகவும், 5 தொகுதிகளில் அதிமுகவும் போட்டியிடுவதாக அறிவித்திருந்தன.
இதில், அதிமுக போட்டியிடும் 5 வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
உப்பளம் - அன்பழகன்
உருளையன்பேட்டை - ஓம்சக்தி சேகர்
முத்தியால்பேட்டை - வையாபுரி மணிகண்டன்
முதலியார்பேட்டை - பாஸ்கர்
காரைக்கால் தெற்கு - அசனா
மேலும், உருளையன்பேட்டை ஓம்சக்தி சேகரை தவிர்த்து மற்ற அனைவரும் கடந்தமுறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.