ETV Bharat / bharat

அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்கள் - விழிப்புணர்வு ஏற்படுத்த அதிமுக வலியுறுத்தல் - unsafe websites

இணையதளத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் மோசடிகள், அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சைபர் கிரைம் காவல் துறையினருக்கு புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக
அதிமுக
author img

By

Published : Nov 18, 2021, 12:37 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று (நவம்பர் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இணையதளத்தில் நாளுக்கு நாள் விதவிதமான மோசடிகள் அதிகரித்துவருகின்றன. வங்கிக் கணக்கு விவரங்களைத் திருடுவது, நண்பர்கள் பட்டியலைப் பெற்று, அவர்களுக்குத் தவறான செய்திகளை அனுப்புவது எனப் பல மோசடித்தனங்கள் நடக்கின்றன.

கரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி என்பன போன்ற, மக்கள் அதிகம் படிக்க விரும்பும் தகவல்களைச் செய்திகளாக அனுப்பி, கீழ்க்கண்ட லிங்க்கை 'கிளிக்' செய்தால், முழுமையாகப் படிக்கலாம் என, ஒரு லிங்கை அனுப்புகின்றனர். அந்த லிங்கை அழுத்தினால், அவ்வளவுதான். நம் வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு தகவல்கள் போன்றவற்றை திருடிவிடுகின்றனர். எல்லாம் நொடி நேரத்தில் நடந்துவிடுகிறது.

98% தள்ளுபடி விளம்பரம்

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ள சூழ்நிலையில் இப்போது மின்சார பைக், எலெக்ட்ரிக் சைக்கிள்களை குறிவைத்து இணையதளத்தில் மோசடிகள் அதிகரித்துள்ளன. இணையதளத்தில் எலெக்ட்ரிக் சைக்கிள் துணை உபகரணங்கள் பற்றி தேடுவோருக்கு குமார் அண்ட் குமாரி (kumarandkumari.com) என்ற இணையதளம் கண்ணில் படுகிறது.

இந்த இணையதளத்தில் எலெக்ட்ரிக் சைக்கிள்கள் 98% தள்ளுபடியில் கிடைக்கும் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம் குஜராத் சூரத்தில் செயல்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அதில் எந்தத் தொலைபேசி எண்ணும் இல்லை. அந்த இணையதளத்தினை அலசி ஆராய்ந்தபோது முழுக்க முழுக்க ஏமாற்று இணையதளம் எனத் தெரியவந்தது.

விழிப்புணர்வு வேண்டும்

மேலும் இந்த இணையதளம் (website) குறித்து கூகுளில் (Google) தேடிப் பார்த்தபோது, ஏராளமான நபர்கள் இந்த இணையதளத்தினால் ஏமாந்துள்ளனர். எனவே, இது போன்ற அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களைப் பார்க்க வேண்டாம் என சைபர் கிரைம் காவல் துறையினர் புதுச்சேரி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களும் இணையதளத்தில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கண்டு ஏமாற கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: BTS 2021: பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு: தொடங்கிவைக்கும் வெங்கையா நாயுடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.