ETV Bharat / bharat

புதுச்சேரியில் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி

author img

By

Published : Apr 9, 2021, 1:56 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

tamilisai
tamilisai

புதுச்சேரியிலும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதன் காரணமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோவிட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ராஜ்நிவாஸில் நேற்று (ஏப்ரல் 8) நடந்த அரசு அலுவலர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. மேலும், புதுச்சேரி பேருந்துகளில் பயணிகள் நின்றபடி பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும்,

மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்,

தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்,

கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் இந்தக் கூட்டத்தில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக புதுச்சேரியில் வரும் 11 முதல் 14ஆம் தேதி வரை கோவிட் தடுப்பூசி திருவிழா நடத்த மாநில சுகாதாரத் துறைக்கு, இந்தக் கூட்டத்தின்போது துணைநிலை ஆளுநர் தமிழசை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.