புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் சிவப்பு ரேஷன் அட்டைகளுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த இலவச அரிசி ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திலாஸ்பேட்டை பகுதியில் முதலமைச்சர் ரங்கசாமியால் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சிவப்பு அட்டைதாரர்களுக்கு முதலமைச்சர் அரிசி வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து புதுச்சேரி முழுவதும் உள்ள அங்கன்வாடி, அரசுப் பள்ளிகளில் அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திரா நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம், தொகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஆயில் மில்லுக்கு வந்த டேங்கர் லாரியில் 4 டன் பாமாயில் திருட்டு - போலீஸ் விசாரணை