ETV Bharat / bharat

சாக்லேட்டால் பாடகர் எஸ்பிபி-க்கு சிலை - Chocolate Statue of SPB

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது சிலையை சாக்லேட்டில் உருவாக்கி புதுச்சேரியைச் சேர்ந்த பேக்கரி ஊழியர் ஒருவர் அசத்தியுள்ளார்.

புதுச்சேரியில் எஸ்.பி.பியின் சாக்லேட் சிலை

author img

By

Published : Dec 23, 2020, 4:58 PM IST

புதுச்சேரி: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக புதுச்சேரியில் உள்ள சாக்லேட் பேக்கரியில் 339 கிலோ எடை கொண்ட எஸ்பிபியின் சாக்லேட் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள சாக்லெட் பேக்கரியில், சாக்லேட்டால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரிந்து வரும் செஃப் ராஜேந்திரன், ஆண்டுதோறும் சாக்லேட்டால் செய்யப்படும் பொருட்களில் தன்னுடைய கலைத்திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

எஸ்பிபியின் சாக்லேட் சிலை

அந்த வகையில் கடந்த காலங்களில் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், அப்துல்கலாம், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் ஆகியோரின் உருவங்களை சாக்லேட்டுகளைக் கொண்டு தயாரித்துள்ளார்.

எஸ்பிபி-யின் சாக்லேட் சிலை

இந்நிலையில் அண்மையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவரது நினைவைப் போற்றும் வகையிலும் 339 கிலோ சாக்லேட்டைக் கொண்டு 5.8 அடி உயரத்தில் அவரது சிலையை வடிவமைத்துள்ளார்.

161 மணி நேரத்தில் தத்ரூபமாக தயாரிக்கப்பட்டுள்ள எஸ்பிபியின் சாக்லேட் சிலை, சாக்லேட் பிரியர்களையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி, சாக்லேட்டில் புதுமை காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் எஸ்பிபி சிலையை உருவாக்கியதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க: விமான நிலையத்தில் மயங்கி விழுந்த பயணி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.