மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் முழு அடைப்பிற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. குறிப்பாக, சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற அமைப்பு இந்த போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது.
இந்த போராட்டம் தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை மையமாக் கொண்டு நடைபெறுகிறது. ஹரியானா, பஞ்சாப் மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த போராட்டத்தை ஓராண்டு காலமாக தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
டெல்லியின் நுழைவு வாயிலான ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகியவை அமைந்திருப்பதால் எல்லையை ஒட்டி நடைபெறும் போராட்டம் தலைநகரை முற்றிலுமாக முடக்கியுள்ளது.
முக்கிய நெடுஞ்சாலையான சோனிபட் நெடுஞ்சாலை போராட்டக்காரர்களால் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லி-ஹரியானா தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கார்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, அத்தியாவசிய போக்குவரத்து, மருத்துவ சிகிச்சைகளுக்கு போராட்டக்காரர்கள் வழிவிடுகின்றனர். மேலும், இன்றைய தினம் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்டேட் வங்கிபோல 4-5 வங்கிகள் நாட்டிற்குத் தேவை - நிர்மலா சீதாராமன்