லக்னோ: உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கரோனா பாதிப்பிலிருந்து விரைந்து குணமடைய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாழ்த்தியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களும் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன். இருவரும் நலமுடன் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்துவருகின்றனர்.