புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குத் தனியார் தொலைக்காட்சி சார்பாக ஒளிப்பதிவாளர் பரத் (33) என்பவர் பணிபுரிந்துவந்தார். அண்மையில் அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்று வந்தார். இதனிடையே, சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று(ஏப்.22) இறந்தார். இறந்த பரத்தின் குடும்பத்தினருக்கு புதுச்சேரியின் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர் மற்றும் புகைப்பட கலைஞர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
ஒளிப்பதிவாளர் இறப்பு குறித்து அறிந்து அம்மாநில அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு இயக்க நிர்வாகிகளும் தங்களின் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.
![Corona death](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/04:47:06:1619090226_tn-pud-02-corona-death-tn10044_22042021164605_2204f_1619090165_197.jpg)
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவரிசையில் இன்று(ஏப்.22) ஒரே நாளில் அதிகபட்சமாக 987 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சைப் பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர். 464 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.