ETV Bharat / bharat

குஜராத் மக்களின் அன்பிலும் பாசத்திலும் நெகிழ்ந்து மகிழ்ந்த மோடி!

டெல்லி: குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், மாநில மக்களுக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Mar 2, 2021, 10:18 PM IST

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆயிரத்து 182 வார்டுகளில் வெற்றிபெற்று பாஜக மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இரண்டாவது இடத்திலுள்ள காங்கிரஸ் 214 இடங்களிலும் சுயேச்சைகள் 73 இடங்களிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்னன. ஆம் ஆத்மி இரண்டு இடங்களையும் பகுஜன் சமாஜ் இரண்டு இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தலில் பாஜக 382 இடங்களையும் காங்கிரஸ் 84 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. சுயேச்சை, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் ஆகியவை தலா இரு இடத்தில் வெற்றபெற்றுள்ளன. தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் ஆயிரத்து 636 இடங்களில் பாஜகவும் 625 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றுள்ளன.

இந்நிலையில், குஜராத் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "நாகர் பாலிகா, மாநிலம் முழுவதும் நடைபெற்ற தாலுகா, மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தல்களில் வெளியான முடிவுகள் மிக தெளிவான செய்தியை உணர்த்துகின்றன.

வளர்ச்சி மற்றும் நல்ல நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டுள்ள பாஜகவுடன் மக்கள் உறுதியாக உள்ளனர். பாஜக மீது அளவற்ற அன்பையும் பாசத்தையும் செலுத்தும் குஜராத் மக்களுக்குத் தலைவணங்குகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.