ETV Bharat / bharat

இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சந்திப்பு.. பெங்களூரு விரைந்தார் பிரதமர் மோடி!

சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க பிரதமர் மோடி பெங்களூரு விரைந்தார்.

Modi
Modi
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 6:43 AM IST

Updated : Aug 26, 2023, 6:49 AM IST

பெங்களூரு : சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க திட்டமிட்டு உள்ள பிரதமர் மோடி, அதற்காக பெங்களூரு விரைந்தார்.

நிலவின் தென் துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை கடந்த ஜூலை 14ஆம் தேதி அனுப்பியது. பூமி மற்றும் நிலவின் சுற்றுப்பாதைக்குள் பல்வேறு கட்ட அடுக்குகளில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை நிலவில் தரையிறங்கியது.

இதன் மூலம் சர்வதேச அளவில், நிலவில் அமைதியான முறையில் விண்கலத்தை தரையிறக்கிய 4வது நாடு என்கிற பெருமையையும், தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற வரலாற்று சிறப்பையும் இந்தியா பெற்றது. படிப்படிப்பாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்ட நிகழ்வை தென் ஆப்ரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி, இஸ்ரோ குழுவினருடன் இணைந்து பார்த்தார்.

சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து, தென் ஆப்பிரிக்காவில் இருந்தவாறு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இந்தியா வந்ததும் சந்திரயான் 3 திட்டத்திற்காக அயராது உழைத்த அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளையும் நேரில் அழைத்து பாரட்டுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்கும் திட்டத்தில், இன்று (ஆகஸ்ட். 26) கர்நாடக தலைநகர் பெங்களூருவுக்கு பிரதமர் மோடி விரைந்து உள்ளார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் திரண்ட பாஜக தொண்டர்கள், பொது மக்கள் கட்சி போஸ்டர்கள், தேசியக் கொடி உள்ளிட்டவைகளை கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  • #WATCH | Karnataka | PM Narendra Modi greets people gathered outside HAL airport in Bengaluru.

    PM Modi will meet scientists of the ISRO team involved in Chandrayaan-3 Mission at ISRO Telemetry Tracking & Command Network Mission Control Complex. pic.twitter.com/70owpeWwlF

    — ANI (@ANI) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த சந்திப்பின் இடையே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், சூரியனை ஆய்வு செய்யும் திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பிரதமர் மோடி தன் X சமூக வலைதபக்கத்தில், "பெங்களூருவில் தரையிறங்கிவிட்டேன். சந்திரயான் 3 திட்டம் மூலம் இந்தியாவை பெருமை கொள்ள வைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து உரையாடும் நேரத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். விண்வெளித் துறையில் நமது நாட்டின் சாதனைகளுக்குப் பின்னால் விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பும் ஆர்வமும் தான் உந்து சக்திகளாக இருக்கிறது" என்று பதிவிட்டு உள்ளார்.

  • Landed in Bengaluru. Looking forward to interacting with our exceptional @isro scientists who have made India proud with the success of Chandrayaan-3! Their dedication and passion are truly the driving forces behind our nation's achievements in the space sector.

    — Narendra Modi (@narendramodi) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க : சந்திரயான்-3 திட்டம் வெற்றி எதிரொலி : இஸ்ரோ செல்கிறார் பிரதமர் மோடி!

Last Updated : Aug 26, 2023, 6:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.