ETV Bharat / bharat

Heeraben Modi: தாயார் ஹீராபெனுக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனை விரைந்த பிரதமர் மோடி! - ஹீராபென் மோடியின் உடல்நிலை அறிக்கை

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By

Published : Dec 28, 2022, 1:30 PM IST

Updated : Dec 28, 2022, 5:31 PM IST

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று (டிசம்பர் 28) உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 100 வயதாகும் ஹீராபென் குஜராத் சட்டப் பேரவை தேர்தலின்போது வாக்களித்தார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 4ஆம் தேதி காந்திநகரில் உள்ள வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றிருந்தார்.

இவரது உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி அகமதாபாத்திற்கு வருவதாக தெரிகிறது. அகமதாபாத்தின் நரோடா, சர்தார் நகர் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. ஹீராபென் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் ஹீராபென் மோடியின் உடல் நிலை சீராக உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூருவில் நேற்று (டிசம்பர் 27) பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி குடும்பத்தினருடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் பிரகலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, பிரதமர் மோடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆறுதளிக்கும் வகையில் டிவிட்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "தாய்க்கும் மகனுக்கும் இடையிலான அன்பு முடிவில்லாதது மற்றும் விலை மதிப்பற்றது. இந்த கடினமான் நேரத்து எனது அன்பும் ஆதரவும் உங்களுக்கு உண்டு. உங்கள் தாயார் விரைவில் குணமடைவார்" எனக் கூறியுள்ளார்.

  • एक मां और बेटे के बीच का प्यार अनन्त और अनमोल होता है।

    मोदी जी, इस कठिन समय में मेरा प्यार और समर्थन आपके साथ है। मैं आशा करता हूं आपकी माताजी जल्द से जल्द स्वस्थ हो जाएं।

    — Rahul Gandhi (@RahulGandhi) December 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

குஜராத் விரைந்த பிரதமர் மோடி மருத்துவமனைக்கு நேரில் சென்று தாயார் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அவரை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகா மிக்ஸி வெடிப்பு பயங்கரவாத செயல் அல்ல - போலீஸ் விளக்கம்

Last Updated : Dec 28, 2022, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.