ETV Bharat / bharat

ஈநாட்டின் அமிர்தப் பெருவிழா: ஈநாடு குழுமத்தின் 'அழியாத இந்தியாவின் சுதந்திரப்போராட்டம்' எனும் புத்தகத்தை வெளியிட்ட பிரதமர் மோடி

இந்திய சுதந்திரத்தின் அமிர்த காலத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போற்றும் வகையில் ஈநாடு குழுமம் தயாரித்த புத்தகத்தின் பிரதியை பிரதமர் மோடி வெளியிட்டார்.

பிரதமர் மோடியிடம் ஈநாடு குழுமம் தயாரித்த புத்தகம் வழங்கப்பட்டது

author img

By

Published : Oct 26, 2022, 2:05 PM IST

Updated : Oct 26, 2022, 6:49 PM IST

டெல்லி: இந்திய சுதந்திரத்தின் அமிர்த காலத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போற்றும் வகையில் ஈநாடு குழுமம் தயாரித்த புத்தகத்தின் (The Immortal Saga - India's Struggle for Freedom) பிரதியை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்தப் புத்தகத்தை ஈநாடு குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கிரண் பெற்றுக்கொண்டார். அவருடன் மார்கதர்சி சிட் ஃபண்ட் நிர்வாக இயக்குநர் சைலஜா, ராமோஜி பிலிம் சிட்டி நிர்வாக இயக்குநர் விஜயேஸ்வரி உடனிருந்தனர்.

அப்போது பிரதமர் மோடி, ஈநாடு குழுமத்தின் முயற்சியை பெரிதும் பாராட்டினார். சுதந்திரத்தின் அமிர்த காலத்தில், இதுபோன்ற முயற்சிகள் காலத்தின் தேவையாகிறது. நமது சுதந்திரப் போராட்டத்தின் சிறப்பம்சம், மக்களின் பங்கேற்புதான். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளனர்.

பிரதமர் மோடி உடன் ஈநாடு குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கிரண்

ஆனால், பல்வேறு போராட்ட வீரர்கள் முன்னிலைப் படுத்தப்படவில்லை. அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இந்த நேரத்தில் ஈநாடு குழுமத்தின் முயற்சி சிறப்பானது எனத் தெரிவித்தார். அதோடு, ஈநாடு குழும தலைவர் ராமோஜி ராவ் உடனான தனது நட்பையும், சந்திப்பையும் குறித்து அவர்களிடம் பேசினார். நாட்டின் வளர்ச்சிக்கு ராமோஜி ராவ்வின் பங்களிப்புக்கும் பாராட்டு தெரிவித்தார்.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை விடுதலைப் பெருவிழாவாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளப்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக தபால்தலை வெளியிடுதல், கண்காட்சிகள், கருத்தரங்குகள், தூர்தர்ஷன் பொதிகையில் ஸ்வராஜ் எனும் தொடர் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தல் உள்ளிட்டவைகள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.

அமிர்த பெருவிழா: ஈநாடு குழுமம் தயாரித்த புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்

இதையும் படிங்க: மாநில உள்துறை அமைச்சர்கள், டிஜிபிக்களுக்கான "சிந்தன் ஷிவிர்" கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

Last Updated : Oct 26, 2022, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.