ETV Bharat / bharat

மிக்ஜாம் புயல் தாக்கம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

Prime Minister Narendra Modi: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்து, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Prime Minister Narendra Modi has consoles the victims of michaung Cyclone
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 2:23 PM IST

டெல்லி: வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் (Michaung) புயலால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக, சென்னையின் முக்கிய பகுதிகள் மட்டுமல்லாமல், புறநகர் பகுதிகளிலும் நீர் சூழ்ந்தது.

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாமல், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும், பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

பலத்த காற்றுடன் பெய்த கன மழையின் காரணமாக பல இடங்களிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டு இருந்ததால், மக்கள் உதவிக்காக தொடர்பு கொள்ள முடியாமலும் தவித்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முதல் சென்னையில் ஒவ்வொரு பகுதியாக மின் விநியோகம் சீரடைந்தது.

  • My thoughts are with the families of those who have lost their loved ones due to Cyclone Michaung, especially in Tamil Nadu, Andhra Pradesh and Puducherry. My prayers are with those injured or affected in the wake of this cyclone. Authorities have been working tirelessly on the…

    — Narendra Modi (@narendramodi) December 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த கனமழையின் காரணமாக பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்த நிலையில், விலைமதிப்பற்ற உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆறுதல் தெரிவித்து, அவரது X சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரியில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருடன் நான் இருக்கிறேன். இந்த புயலின் தாக்கத்தால் காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அதிகாரிகள் அயராது உழைத்து வருகிறார்கள். நிலைமை சீராகும் வரை அவர்கள் பணியைத் தொடர்வார்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் சிக்கிய கலிபோர்னியா பயணி.. பாதுகாப்பாக அழைத்து வந்த ஹோட்டல் ஊழியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.