டெல்லி: 95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஒட்டு மொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்த இந்த விழாவில், சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, சிறந்த ஆவண குறும்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்ற இந்த இந்த விருது விழாவை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். மேலும் இந்த விருது வழங்கும் விழாவில் இந்தியா தரப்பில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விருது வழங்கும் கமிட்டியில் உறுப்பினராக உள்ளார். மேலும் ஆர்ஆர்ஆர்(RRR) திரைப்படத்தின் இயக்குனர் ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவப்பு கம்பள விரிப்பு அலங்கரித்தனர்.
இந்தியாவில் இருந்து ஆவண குறும்படத்திற்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் (the elephant whisperers) குறும்படம் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. யானைக் கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானையை முதுமலையைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி என்ற பழங்குடியின தம்பதி பராமரிப்பதை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்.
அதேபோல் ராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்று இருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதை இசையமைப்பாளர் கீரவாணி, பாடல் ஆசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இதில் துரதிர்ஷ்டவசமாக குறும்படம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட ஆல் தட் ப்ரீத்ஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. சினிமாவின் உச்சபட்சம் எனக் கூறப்படும் ஆஸ்கர் விருதை வென்றவர்களுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
பிரதமர் மோடி: தனது ட்விட்டர் பக்கத்தில் "நாட்டு நாட்டு பாடலின் புகழ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இன்னும் பல வருடங்கள் நினைவில் நிற்கும் பாடலாக நாட்டு நாட்டு பாடல் இருக்கும். ஒட்டுமொத்த படக் குழுவுக்கும் எனது வாழ்த்துகள். உங்களால் இந்தியா பெருமிதம் கொள்கிறது. அதேபோல், நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை The Elephant Whisperers படம் உணர்த்தி உள்ளது. அனைவருக்கும் என் வாழ்த்துகள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
-
Exceptional!
— Narendra Modi (@narendramodi) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The popularity of ‘Naatu Naatu’ is global. It will be a song that will be remembered for years to come. Congratulations to @mmkeeravaani, @boselyricist and the entire team for this prestigious honour.
India is elated and proud. #Oscars https://t.co/cANG5wHROt
">Exceptional!
— Narendra Modi (@narendramodi) March 13, 2023
The popularity of ‘Naatu Naatu’ is global. It will be a song that will be remembered for years to come. Congratulations to @mmkeeravaani, @boselyricist and the entire team for this prestigious honour.
India is elated and proud. #Oscars https://t.co/cANG5wHROtExceptional!
— Narendra Modi (@narendramodi) March 13, 2023
The popularity of ‘Naatu Naatu’ is global. It will be a song that will be remembered for years to come. Congratulations to @mmkeeravaani, @boselyricist and the entire team for this prestigious honour.
India is elated and proud. #Oscars https://t.co/cANG5wHROt
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ட்விட்டர் பக்கத்தில், "ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்காவுக்கு வாழ்த்துக்கள். இந்திய தயாரிப்பிற்காக முதன் முதலில் ஆஸ்கார் விருதை இரண்டு பெண்கள் கொண்டு வந்ததை விட சிறந்த செய்தி இல்லை. இந்த குறும்படம் உருவாக்கம் மற்றும் கதை நகரும் அமைப்பு அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானது.
அதேபோல், ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல் முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற வரலாறு படைத்துள்ளது. இயக்குநர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ், நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆர் ஆர் ஆர் படக் குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள்" என தனது ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
#NaatuNaatu has created history by becoming the first Indian & Asian song to win the #Oscars.
— M.K.Stalin (@mkstalin) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congrats @mmkeeravaani garu, Chandrabose, Rahul Sipligunj & Kaala Bhairava, @ssrajamouli, @tarak9999, @AlwaysRamCharan and the whole team of #RRR for this stupendous achievement. https://t.co/sdSHatlEtx
">#NaatuNaatu has created history by becoming the first Indian & Asian song to win the #Oscars.
— M.K.Stalin (@mkstalin) March 13, 2023
Congrats @mmkeeravaani garu, Chandrabose, Rahul Sipligunj & Kaala Bhairava, @ssrajamouli, @tarak9999, @AlwaysRamCharan and the whole team of #RRR for this stupendous achievement. https://t.co/sdSHatlEtx#NaatuNaatu has created history by becoming the first Indian & Asian song to win the #Oscars.
— M.K.Stalin (@mkstalin) March 13, 2023
Congrats @mmkeeravaani garu, Chandrabose, Rahul Sipligunj & Kaala Bhairava, @ssrajamouli, @tarak9999, @AlwaysRamCharan and the whole team of #RRR for this stupendous achievement. https://t.co/sdSHatlEtx
நடிகர் ரஜினிகாந்த்: ட்விட்டர் பக்கத்தில் "ஸ்ரீ கீரவாணி, ஸ்ரீ ராஜமவுலி, ஸ்ரீ கார்திகி கோன்சல்வேஸ் ஆகியோர் மதிப்புமிக்க விருதை பெற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பெருமைமிக்க இந்தியர்களுக்கு தலை வணங்குகிறேன்" என பதிவிட்டு உள்ளார். மேலும் அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் ஆஸ்கர் வென்ற குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-
My hearty congratulations to Shri. Keeravani, Shri. Rajamouli and Shri. Kartiki Gonsalves for getting the prestigious Oscar Award. I salute to the proud Indians.
— Rajinikanth (@rajinikanth) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My hearty congratulations to Shri. Keeravani, Shri. Rajamouli and Shri. Kartiki Gonsalves for getting the prestigious Oscar Award. I salute to the proud Indians.
— Rajinikanth (@rajinikanth) March 13, 2023My hearty congratulations to Shri. Keeravani, Shri. Rajamouli and Shri. Kartiki Gonsalves for getting the prestigious Oscar Award. I salute to the proud Indians.
— Rajinikanth (@rajinikanth) March 13, 2023
இதையும் படிங்க: Oscar Award 2023: ஒரே படத்திற்கு 7 ஆஸ்கர்.. விருது வென்ற படங்கள் பட்டியல்!