ETV Bharat / bharat

ஜி20 மாநாடு - பிரதமர் மோடியை வரவேற்ற இத்தாலி பிரதமர்

ரோமா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டிற்காக வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி வரவேற்றார்.

ஜி20 மாநாடு
ஜி20 மாநாடு
author img

By

Published : Oct 30, 2021, 7:44 PM IST

ரோம் (இத்தாலி): பிரதமர் நரேந்திர மோடி ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள அக்.29ஆம் தேதி இத்தாலி புறப்பட்டு சென்றார். இந்தக் கூட்டம் நாளை (அக்.31) வரை நடக்கிறது.

கடந்த ஆண்டு கோவிட் பரவல் காரணமாக ஜி20 மாநாடு காணொலி வாயிலாக சௌதி அரேபியாவில் நடைபெற்றது. இந்நிலையில், மோடி எட்டாவது முறையாக ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். உலகப் பொருளாதாரம், உலகளாவிய ஆரோக்கியம் குறித்த G20 தொடக்க அமர்வில் பிரதமர் மோடி நாளை பங்கேற்கவுள்ளார்.

இம்மாநாட்டைத் தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.

மேலும், நாளை (அக்.31) ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மேர்க்கெல் ஆகியோருடன் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பற்றிய விவாதங்களில் அவர் பங்கேற்க உள்ளார்.

முன்னதாக, போப் பிரான்சிஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடி வாடிகன் நகரில் இருந்து புறப்பட்டார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் (இஏஎம்) டாக்டர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் பிரதமர், G20 தலைவர்களுடன் இரவு விருந்தில் பங்கேற்க உள்ளார்.

இதையும் படிங்க: போப் ஆண்டவரை சந்திக்கிறார் நரேந்திர மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.