ETV Bharat / bharat

பிரதமர் மோடியின் அட்வென்சரஸ் பயணம்.. முதுமலையில் ஆஸ்கர் தம்பதியுடன் உரையாடல்! - முதுமலை

முதுமலை புலிகள் சரணாலயம் மற்றும் தெப்பக்காடு யானைகள் முகாம் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்த யானைகளுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தார். ஆஸ்கர் வென்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் நாயகர்களான பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Modi
Modi
author img

By

Published : Apr 9, 2023, 12:03 PM IST

Updated : Apr 9, 2023, 1:07 PM IST

முதுமலையில் யானைகளுக்கு உணவளித்த பிரதமர் மோடி

நீலகிரி: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தென்மாநிலங்களுக்கு வந்து உள்ளார். நேற்று (ஏப்.8) தெலங்கானா மாநிலம் ஐதராபாத் வந்த பிரதமர் மோடி செகந்திராபாத் - திருப்பதி இடையிலான வந்தே பாரத் ரயில் திட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு நிறைவு பெற்ற பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழா மற்றும் பல்லாவரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஏறத்தாழ 5 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.

இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கர்நாடகா சென்றார். சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று (ஏப்.9) பிரதமர் மோடி பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு சென்றார். பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் 20 கிமீட்டர் தொலைவுக்கு ஜீப் சவாரி செய்த பிரதமர் மோடி வனப்பகுதியை சுற்றிப் பார்த்தார்.

இதற்காக வனத்துறையினர் போன்று பிரதமர் மோடி உடை அணிந்திருந்தார். எப்போது குர்தா உள்ளிட்ட உடைகளை மட்டுமே அணியும் பிரதமர் மோடி முதல் முறையாக வனத் துறையினர் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தற்போது அந்த உடை குறித்த தகவல்கள் அனைவராலும் தேடப்பட்டு வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பின் பிரதமர் மோடி அணிந்த உடை பேசு பொருளாக மாறி உள்ளது.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்ட பிரதமர் மோடி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் சரணாலயம் மற்றும் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு சென்றார்.

தெப்பாக்காடு யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, கரும்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை யானைகளுக்கு வழங்கினார். தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பாகன் பொம்மன், பெள்ளியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து உரையாடினார்.

அதன்பின்னர், சாலை மார்கமாக கார் மூலம் தெப்பக்காட்டிலிருந்து மசினகுடி சென்றார். அங்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களிடம் கைக்குளுக்கினார். அதன் பின்னர் மசினகுடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மீண்டும் மைசூரு சென்றார்.

இதையும் படிங்க : பிரதமர் மோடி முதுமலை வருகை - வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிடுகிறார்!

Last Updated : Apr 9, 2023, 1:07 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.