டெல்லி: அஜ்மிர் ஷெரிஃப் தர்காவில் கடந்த வாரம் பாரம்பரிய முறைப்படி கொடி ஏற்றி உரூஸ் திருவிழா தொடங்கியது. பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி நிறைவடையும் இத்திருவிழாவிற்கு பாகிஸ்தானிலிருந்தும் இஸ்லாமியர்கள் வந்து கலந்துகொள்வர்.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக பாகிஸ்தானைச் சேர்ந்த எவரும் இதில் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்த அலுவலர்கள், பாகிஸ்தானிலிருந்து இதுவரை யாரும் விழாவில் பங்கேற்பதற்காக விசா விண்ணப்பிக்கவில்லை என்றனர்.
-
Handed over a Chadar that would be offered at the Ajmer Sharif Dargah on the 809th Urs of Khwaja Moinuddin Chisti. pic.twitter.com/DHa1f5p0kk
— Narendra Modi (@narendramodi) February 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Handed over a Chadar that would be offered at the Ajmer Sharif Dargah on the 809th Urs of Khwaja Moinuddin Chisti. pic.twitter.com/DHa1f5p0kk
— Narendra Modi (@narendramodi) February 15, 2021Handed over a Chadar that would be offered at the Ajmer Sharif Dargah on the 809th Urs of Khwaja Moinuddin Chisti. pic.twitter.com/DHa1f5p0kk
— Narendra Modi (@narendramodi) February 15, 2021
இதற்கிடையில், பிரதமர் மோடி இன்று உரூஸ் திருவிழாவை முன்னிட்டு அஜ்மிர் ஷெரிஃப் தர்காவிற்கு காவி நிறத்திலான போர்வையை வழங்கியுள்ளார். இதனைப் பெற்றுக்கொண்ட சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, தர்காவில் அதை சமர்பிக்கவுள்ளார்.