ETV Bharat / bharat

பெண் பக்தரிடம் திருமணத்தை மீறிய உறவில் அர்ச்சகர் - மனைவிக்கு கொலை மிரட்டல்! - Child abuse

கோயிலுக்கு வரும் பெண் பக்தரிடம் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த அர்ச்சகரை கண்டித்த மனைவியை, கொலை செய்து விடுவதாக கணவரான அர்ச்சகர் மிரட்டல் விடுத்துள்ளார்.

பெண் பக்தர்களிடம் அத்துமீறிய உறவில் அர்ச்சகர் - மனைவிக்கு கொலை மிரட்டல்!

author img

By

Published : Jul 13, 2022, 9:33 PM IST

அனந்தபூர் : ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம் பெத்தஞ்சேர் பகுதியைச் சேர்ந்தவர் அனந்தசாய்னா. கோயில் அர்ச்சகரான இவருக்கு, ஸ்ரவந்தி என்பவருடன் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனால், சென்ற ஏழு ஆண்டுகளாக மனம் மற்றும் உடல் ரீதியாக மனைவி ஸ்ரவந்தியை, அனந்தசாய்னா துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், ஆறு மாதங்களாக கோயிலுக்கு வரும் பல இளம்பெண்கள் மற்றும் பெண்களுடன் திருமணத்திற்கு மீறிய உறவுகளை அனந்தசாய்னா வைத்து வந்துள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆடியோ பதிவுகளையும் வைத்து இருந்துள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி அவரைக் கண்டித்துள்ளார்.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என அனந்தசாய்னா மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து அனந்தசாய்னாவிடம் முறையிட்ட ஸ்ரவந்தியின் உறவினர்களையும், கணவர் அனந்தசாய்னா தாக்கியுள்ளார். எனவே, இதுகுறித்து ஸ்ரவந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: 1ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - பள்ளி பியூன் போக்சோவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.