வங்கக் கடலில் உருவான யாஸ் புயல், ஒடிசா மாநிலம், பாலசோருக்கு அருகே நேற்று (மே.26) கரையைக் கடந்தது. முன்னதாக, யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியக் கடலோர காவல்படை முன்கூட்டியே மேற்கொண்டதால், எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதே இந்தியக் கடலோரக் காவல்படை மீன்பிடிக்கச் சென்ற 265 மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்தது. புயலுக்குப் பிறகு ஏற்படும் எந்த சூழலையும் சந்திக்க, இந்தியக் கடலோர காவல்படையின் கரையோர, மிதவை, விமானப் பிரிவுகள் தயார் நிலையில் உள்ளன.
ஒடிசா மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க, மேற்கு வங்கத்தின் டிகா, கண்டாய்ப் பகுதிகளுக்குப் பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன.
அதேபோல் மழை வெள்ளத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க, ரப்பர் மிதவை உள்பட மீட்பு உபகரணங்களை ஒடிசா, மேற்கு வங்க மாநில அரசுகளின் தேவைக்கேற்ப இந்தியக் கடலோர காவல்படை தயார் நிலையில் வைத்துள்ளது.
இதையும் படிங்க: யாஸ் புயல் தாக்கம்: சூறைக்காற்றில் படகுகள் சேதம்!