டெல்லி: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 26) முதல் டிசம்பர் 30ஆம் தி வரை தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அந்த வகையில் இன்று குடியரசுத் தலைவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலுக்குச் சென்று, மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் பிரசாத் திட்டத்தின் கீழ் ஸ்ரீசைலம் கோயிலின் மேம்பாடு தொடர்பான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
அவர் குடியரசு தலைவர் நிலையத்திற்குச் செல்வதற்கு முன் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திரத்தையும் பார்வையிடுவார். டிசம்பர் 27ஆம்தேதி ஹைதராபாத்தில் உள்ள கேசவ் நினைவு கல்வி சங்கத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். அதே நாளில், சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமிக்கு சென்று இந்திய போலீஸ் சேவையின் பயிற்சியாளர்களிடம் உரையாற்றுகிறார். ஹைதராபாத்தில் மிஸ்ரா தாது நிகாம் நிறுவனத்தின் வைட் பிளேட் மில்லையும் திறந்து வைக்கிறார்.
டிசம்பர் 28ஆம் தேதி, குடியரசுத் தலைவர் பத்ராசலம் ஸ்ரீ சீத்தாராம சந்திர சுவாமிவாரி தேவஸ்தானத்திற்குச் சென்று பிரசாத் திட்டத்தின் கீழ் பத்ராசலம் கோயிலில் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அடிக்கல் நாட்டுகிறார். தெலுங்கானாவின் வனவாசி கல்யாண் பரிஷத் ஏற்பாடு செய்த சம்மக்கா சாரலம்மா ஜஞ்சதி பூஜாரி சம்மேளனை அவர் தொடங்கி வைக்கிறார். மேலும் தெலுங்கானாவின் கோமரம் பீம் ஆசிபாபாத் மற்றும் மஹபூபாபாத் மாவட்டங்களில் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளையும் அவர் தொடங்கிவைக்கிறார். அதே நாளில், வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ராமப்பா கோயிலுக்குச் செல்லும் அவர், ராமப்பா கோயிலில் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் காமேஸ்வராலய கோயிலின் புனரமைப்புக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.
ஹைதராபாத்தில் உள்ள பி.எம்.மலானி நர்சிங் கல்லூரி மற்றும் சுமன் ஜூனியர் கல்லூரியின் மகிளா தக்ஷதா சமிதியின் ஜி. நாராயணம்மா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (மகளிர் ) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் குடியரசுத் தலைவர் 29ஆம் தேதி உரையாடுவார். அன்றைய தினம், ஷம்ஷாபாத் ஸ்ரீராம்நகரில் உள்ள சமத்துவ சிலையை பார்வையிடுகிறார். டிசம்பர் 30ஆம் தேதி டெல்லி திரும்புவார்.
இதையும் படிங்க: 2022ஆம் ஆண்டின் சாதனைகளை பட்டியலிட்ட பிரதமர் மோடி