டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மூன்றுநாள் பயணமாக இன்று தமிழ்நாடு வந்தார்.
இது குறித்து குடியரசுத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குடியரசுத் தலைவர் இன்று (மார்ச் 9) சென்னை வருகிறார். அங்கிருந்து நாளை வேலூரிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 16ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகப் புறப்படுகிறார். பின்னர், நாளை திட்டமிட்டபடி, பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.
அதைத்தொடர்ந்து, வரும் 11ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழத்தின் 41ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.