காந்தியடிகளின் 152ஆவது பிறந்தநாள் விழா நாளை (அக். 2) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் வாழ்த்து செய்தியில், "தேசத் தந்தை அண்ணல் காந்தியடிகளின் 152ஆவது பிறந்தநாள் விழாவில் நாட்டு மக்களின் சார்பாக எனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அகிம்சை என்ற கொள்கையை உலகிற்கு அளித்த காந்தியின் பிறந்தநாள் அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது. சமுதாய மேம்பாட்டிற்கு அகிம்சை என்ற தத்துவத்தை உலகம் கையிலெடுக்க வேண்டும் என காந்தி நம்பினார்.
தேச விடுதலை, தீண்டாமை நீக்கம், சமூக அவலங்களை போக்குதல், விவசாயிகளின் பொருளாதார மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் காந்தியின் பங்களிப்பு அளப்பரியது. இந்தியர்கள் அனைவருக்கும் காந்தி ஜெயந்தி சிறப்பான தினமாகும். காந்தியின் போராட்டத்தையும் தியாகத்தையும் நினைவுகூர வேண்டிய நாள் இது.
இந்நாளில் நாட்டு மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்க நாம் உறுதி ஏற்க வேண்டும். காந்தியின் கனவை நனவாக்க நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'கழுத்தை நெறித்துள்ளீர்கள்' - விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!