பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் முதன்மை அரசியல் ஆலோசகராக பணியாற்றி வந்த பிரசாந்த் கிஷோர், தன் பதவியை திடீரென துறந்துள்ளார்.
தன் தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியல் ஆலோசகர் பதவியை துறந்துள்ளதாக இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசாந்த் கிஷோரின் இந்த முடிவு அரசியல் வட்டாரங்களை உற்றுநோக்க வைத்துள்ளது.
முன்னதாக, நடைபெற்ற ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுகவுக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார்.
தொடர்ந்து இந்த இரண்டு மாநிலங்களிலும், திமுகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பெருவெற்றி பெற்ற நிலையில், தனது ஐ-பேக் நிறுவனத்திலிருந்து விலகினார்.
தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், இமாச்சல பிரேதசம், கோவா, மணிப்பூர் என பாஜக ஆளும் மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாபிலும் அடுத்த ஆண்டு தேர்தலைக் குறி வைத்து பாஜகவுக்கு எதிரான அணியை வலுப்படுத்தும் வகையில் அவர் பணியாற்றி வந்தார்.
சமீப காலமாக காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணையவுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அவரது இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 2024 தேர்தலைக் குறிவைத்து மாற்றம்...பிரசாந்த் கிஷோர் கைகளுக்குள் காங்கிரஸ்!