தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ஐ பேக் நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நடைபெற்று முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் திருணாமூல், தமிழ்நாட்டில் திமுக ஆகிய கட்சிகளுக்காக பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம் பணியாற்றிவந்தது.
இன்றைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, மேற்கு வங்கத்தில் திருணாமூல் காங்கிரசும், தமிழ்நாட்டில் திமுகவும் ஆட்சியமைக்க உள்ளன. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஐ பேக் நிறுவனத்திலிருந்து விலக இருப்பதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்திருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உடன் பணியாற்றியவர்கள் தொடர்ந்து அந்நிறுவனத்தை நடத்துவார்கள் எனவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.