ஹைதராபாத் (தெலங்கானா): இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதனையடுத்து, நிலவின் தென் துருவத்தில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மேற்கொள்ளும் ஆய்வு குறித்து இஸ்ரோ தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது.
அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 31) இஸ்ரோ தனது ‘X' வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவில், “பாதுகாப்பான பாதையை நோக்கி ரோவர் சுழற்றப்பட்டது. இவ்வாறு ரோவர் சுழன்றதை லேண்டரின் இமேஜர் கேமரா காட்சிப்படுத்தி உள்ளது. இது சந்தாமாமாவில் (சந்திரன் அல்லது நிலவு) குழந்தை விளையாட்டுத்தனமாக மகிழ்ச்சியாக இருப்பது போன்றும், அதனை தாய் பாசத்துடன் பார்ப்பது போன்றும் இல்லையா?” என குறிப்பிட்டு உள்ளது.
-
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The rover was rotated in search of a safe route. The rotation was captured by a Lander Imager Camera.
It feels as though a child is playfully frolicking in the yards of Chandamama, while the mother watches affectionately.
Isn't it?🙂 pic.twitter.com/w5FwFZzDMp
">Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 31, 2023
The rover was rotated in search of a safe route. The rotation was captured by a Lander Imager Camera.
It feels as though a child is playfully frolicking in the yards of Chandamama, while the mother watches affectionately.
Isn't it?🙂 pic.twitter.com/w5FwFZzDMpChandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 31, 2023
The rover was rotated in search of a safe route. The rotation was captured by a Lander Imager Camera.
It feels as though a child is playfully frolicking in the yards of Chandamama, while the mother watches affectionately.
Isn't it?🙂 pic.twitter.com/w5FwFZzDMp
அதே போன்று, நேற்று (ஆகஸ்ட் 30) இஸ்ரோ வெளியிட்ட பதிவில், “ஸ்மைல் ப்ளீஸ்.. இன்று (ஆகஸ்ட் 30) காலை விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவர் புகைப்படம் எடுத்து உள்ளது. இந்த கருவியின் புகைப்படமானது, ரோவரில் பொருத்தப்பட்டு உள்ள நேவிகேஷன் கேமரா (Navigation Camera) மூலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சந்திரயான் 3 விண்கலத்திற்கான நேவிகேஷன் கேமராவை எல்க்ட்ரோ-ஆப்டிக்ஸ் அமைப்பின் ஆய்வகம் (Laboratory for Electro-Optics Systems - LEOS) மேம்படுத்தி உள்ளது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அது மட்டுமல்லாமல், நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 29) நிலவின் முதற்கட்ட ஆய்வில் வரைபடம் மூலம் கணக்கீடு செய்ததன் அடிப்படையில், நிலவின் மேற்பரப்பில் அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) டைட்டானியம் (Ti), மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) ஆகிய தனிமங்கள் இருப்பதை இஸ்ரோ உறுதிபடுத்தி இருந்தது. மேலும், நிலவின் தென் துருவத்தில் ஹைட்ரஜன் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், இன்று மீண்டும் நிலவில் கந்தகம் (சல்பர்) இருப்பதை மற்றொரு வழி மூலம் பிரக்யான் ரோவர் உறுதி செய்து உள்ளதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. ஆல்பா எக்ஸ்ரே துகள்கள் மூலம் நடத்திய சோதனையில், கந்தகம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை பிரக்யான் ரோவர் கண்டறிந்து இருப்பதாகவும், நிலவில் எரிமலை வெடிப்பு, விண்கல் மோதல் உள்ளிட்ட நிகழ்வுகளால் கந்தகம் உருவானதா என்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Smile Please.. பிரக்யான் ரோவர் எடுத்த விக்ரம் லேண்டர் கிளிக்!