ETV Bharat / bharat

பிரதமரைச் சந்தித்தார் பிரக்ஞானந்தா.. கிராண்ட் மாஸ்டரின் நெகிழ்ச்சி பதிவு! - உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

praggnanandhaa met PM Modi: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா, பிரதமர் மோடியை இன்று சந்தித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 8:05 PM IST

Updated : Aug 31, 2023, 9:45 PM IST

டெல்லி: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, இன்று (ஆகஸ்ட் 31) பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உள்ளார். இந்த நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள ‘X' வலைதளப் பதிவில், “இன்று எண் 7 லோக் கல்யாண் மார்க்கில் மிகவும் சிறப்பான பார்வையாளர்கள் இருந்தனர். பிரக்ஞானந்தாவை அவரது குடும்பத்தாருடன் நேரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

  • Had very special visitors at 7, LKM today.

    Delighted to meet you, @rpragchess along with your family.

    You personify passion and perseverance. Your example shows how India's youth can conquer any domain. Proud of you! https://t.co/r40ahCwgph

    — Narendra Modi (@narendramodi) August 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நீங்கள் (பிரக்ஞானந்தா) ஆர்வத்தையும், விடாமுயற்சியையும் வெளிப்படுத்துகிறீர்கள். உங்களைப் போன்ற உதாரணம், இந்திய இளைஞர்கள் எந்த களத்தையும் எப்படி கைப்பற்ற முடியும் என்பதைக் காட்டுகிறது. உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்” என பதிவிட்டு உள்ளார்.

இதனையடுத்து, இது தொடர்பாக பிரக்ஞானந்தா வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தது பெருமையாக இருந்தது. என்னையும், என் பெற்றோரையும் ஊக்கப்படுத்தும் உங்களது அனைத்து வார்த்தைகளுக்கும் நன்றி. உங்களுடன் நிகழ்ந்த இந்த உரையாடல் மிகவும் நன்றாக இருந்தது” என தெரிவித்து உள்ளார்.

முன்னதாக, நேற்று (ஆகஸ்ட் 30) சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய பிரக்ஞானந்தாவிற்கு அரசு சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரக்ஞானந்தா தனது குடும்பத்தாருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

பின்னர், இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட ‘X' வலைதளப் பதிவில், “அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற பிடே (FIDE) உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக, உயரிய ஊக்கத் தொகையான ரூ.30 லட்சத்திற்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

முன்னதாக, இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற டைபிரேக்கர் போட்டியின் முதல் சுற்றில் 1-0 என்ற கணக்கில் நார்வேயின் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

இதில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, கடுமையான முயற்சியை மேற்கொண்டதை அடுத்து, டைபிரேக்கர் முறையின் இரண்டாவது சுற்றில் கறுப்பு நிறக் காய்கள் உடன் பிரக்ஞானந்தா விளையாடினார். இருப்பினும், இறுதியாக நார்வேயின் கார்ல்சன் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "இந்திய திருநாட்டிற்கே பெருமை சேர்த்திருக்கிறான் என் மகன்" - பிரக்ஞானந்தாவின் தந்தை பெருமிதம்!

Last Updated : Aug 31, 2023, 9:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.