ETV Bharat / bharat

குடியரசு தலைவர் விழாவில் பவர் கட்! நாசுக்காக கோபப்பட்ட குடியரசு தலைவர்!

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில் மின் தடை ஏற்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

President Droupadi Murmu
President Droupadi Murmu
author img

By

Published : May 6, 2023, 7:20 PM IST

மயூர்பஞ்ச் : குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில் ஏறத்தாழ 9 நிமிடங்கள் மின்சாரம் தடைபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 3 நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு சென்றார். குடியரசுத் தலைவராக பதவியேற்று ஏறத்தாழ 10 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், முதல் முறையாக திரவுபதி முர்மு தன் சொந்த ஊரான மயூர்பஞ்ச் மாவட்டத்தில், உள்ள ரைரங்பூருக்கு சென்றார்.

சந்தாலி மொழியின் கையெழுத்து வடிவத்தை உருவாக்கிய பண்டிதர் ரகுநாத் முர்முவின் பிறந்தநாள் நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திரவுபதி முர்மு, சிமிலிபால் நகரில் உள்ள வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்றார். ஏறத்தாழ 2 ஆயிரத்து 700 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சரணாலயத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்டார்.

தொடர்ந்து தனது சுற்றுப்பயணத்தின் 3வது மற்றும் கடைசி நாளில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா தியோ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்திய போது திடீரென மின்சாரம் தடைபட்டது.

இருப்பினும் இருள் மயத்திற்கு மத்தியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தன் உரையை தொடர்ந்தார். காலை 11.56 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 12.05 மணிக்கு மின்சாரம் வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 9 நிமிடங்கள் விழாவில் மின்சாரம் தடைபட்டது.

குடியரசு தலைவர் கலந்து கொண்ட விழாவில் மின்சாரம் தடைபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், தன் கோபத்தை நாசுக்காக வெளிப்படுத்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பவர் ஒளிந்து பிடித்து விளையாடுவதாக கூறினார். குடியரசு தலைவரை தொடர்ந்து பட்டமளிப்பு விழாவே நிசப்தமாக காணப்பட்டது.

ஏறத்தாழ 9 நிமிடங்களுக்கு பின் மின் இணைப்பு சீரானது. ஒடிசாவில் மின் சப்ளை செய்து வரும் டாடா பவர் மற்றும் நார்த் ஒடிசா மின் விநியோக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாஸ்கர் சர்கார், தங்கள் தரப்பில் இருந்து எந்தவித தவறும் நடைபெறவில்லை என்றும் விழாவுக்காக மின் சப்ளையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

குடியரசு தலைவர் விழாவில் மின் தடை ஏற்பட்ட சம்பவத்திற்கு மன்னிப்பு கோருவதாக கூறிய பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ் குமார் திரிபாதி, திடீர் மின் தடை ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, மின் தடை விவாகரம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் மின் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்கள் அளிக்கும் அறிக்கையின் படி மின் தடைக்கு பொறுப்பானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என திரிபாதி தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, "பட்டம் பெறுவது என்பது கல்வியை முடித்துவிட்டதாக அர்த்தமல்ல என்றும் கல்வி என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்று கூறினார். உயர் கல்விக்குப் பிறகு மாணவர்கள் ஒரு வேலையை பெறவே விரும்புவதாகவும், அதேநேரம் சிலர் வணிகம் மற்றும் ஆராய்ச்சி செய்ய விரும்புவதாக கூறினார். ஆனால் வேலை செய்ய விரும்புவதை விட பலருக்கு வேலை வழங்குவதே சிறந்தது என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.

இதையும் படிங்க : King Charles Coronation : இங்கிலாந்து மன்னரானார் மூன்றாம் சார்லஸ்! முடிசூட்டு விழா கோலாகலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.