டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மூன்று லட்சத்து ஆராயிரத்து 64 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று, ஒரே நாளில் 14 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் கரோனாவால் 439 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 98 ஆயிரத்து 848 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 22 லட்சத்து 49 ஆயிரத்து 335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 80 லட்சத்து 41 ஆயிரத்து 145 ஆக உள்ளது. இதுவரை 162.26 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் நேற்று (ஜன 21) மட்டும் 27 லட்சத்து 56 ஆயிரத்து 364 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 93 கோடிக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 68 கோடியே 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். சுமார் 78 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தியுள்ளனர்.
ஒமைக்ரான் பரவல் காரணமாக மூன்றாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் தற்போது ஒமைக்ரான் சமூக தொற்றாக மாறியுள்ளதாக INSACOG அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: 25 ஆண்டுகள் பாஜகவுடன் கூட்டணி வைத்து சிவசேனா வீணாய் போனோது - உத்தவ் தாக்கரே ஆதங்கம்