ETV Bharat / bharat

ஆபாச படம் பதிவேற்றம்: ராஜ் குந்த்ரா கைது - ராஜ் குந்த்ரா கைது

மும்பை: ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார்.

kunthra
kunthra
author img

By

Published : Jul 19, 2021, 11:56 PM IST

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா வெப் சீரிஸ் ஒன்றுக்காக ஆபாச படங்களை பதிவு செய்து அதை இணையத்தில் பதிவேற்றியதாக அவர் மீது கடந்த ஆண்டு நடிகை ஷெர்லின் சோப்ரா புகார் அளித்திருந்தார்.

இந்த சூழலில் தனக்கு முன் பிணை வழங்கக்கோரி ராஜ் குந்த்ரா மும்பை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வெப் சீரிஸூக்கும் தனது நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் குற்ற சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடங்களில் மும்பை காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு ராஜ் குந்த்ராவை இன்று கைது செய்தனர்.

குந்த்ராவின் கைது குறித்து மும்பை காவல் துறை ஆணையர் கூறுகையில், “இந்தப் புகாரில் ராஜ் குந்த்ராதான் முக்கிய குற்றவாளி. அதற்கான போதிய ஆதாரங்கள் தங்களிடம் உள்ளன” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.