ETV Bharat / bharat

யார் போனாலும் ஆட்சிக்கு பாதிப்பில்லை - முதலமைச்சர் நாராயணசாமி - முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை விட்டு விலகியதால், கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை எனப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

pondy cm narayanasamy statement
pondy cm narayanasamy statement
author img

By

Published : Jan 25, 2021, 9:06 PM IST

புதுச்சேரி: அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர் தங்களின் பதவியை விட்டு விலகியுள்ளதைத் தொடர்ந்து, முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, "பதிவியைத் துறந்த அமைச்சர் என்னோட செயல்பாட்டு குறித்து பேசுவது சரியானதல்ல. நிர்வாக சீர்கேட்டை சரிசெய்யவேண்டியது முதலமைச்சர் வேலையில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சர் தான் அவரது துறையின் நிர்வாக சீர்கேட்டை சரி செய்ய வேண்டும்.

அவரால் அதை சரிசெய்ய இயலவில்லை என்றால், நிர்வாகம் செய்ய திறமையற்றவர் என்பதைக் காட்டுகிறது. மேலும், கட்சியை விட்டு வெளியே செல்வதற்கு தனக்காக ஒரு காரணத்தைக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் விலகியிருப்பது ஆட்சிக்கு ஆபத்தில்லை. காங்கிரஸ் கூட்டணிக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களும், சுயாட்சி ஆதரவும் எங்களுக்குள்ளது.

பாஜக ஆட்சியைக் கலைக்க முயற்சி மேற்கொள்வது என்பது ஒன்றும் புதிதல்ல. இதையெல்லாம் சமாளித்து காங்கிரஸ் தலை நிமிர்ந்து நிற்கும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.