ETV Bharat / bharat

புதுச்சேரி எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை - காவல்துறையினர் விசாரணை - police

புதுச்சேரி எஸ்பிஐ வங்கி ஏடிஎம்.,மில் அடையாளம் தெரியாத நபர்கள் 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

புதுச்சேரி எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை
புதுச்சேரி எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை
author img

By

Published : Jul 7, 2021, 9:19 AM IST

புதுச்சேரி: எஸ்பிஐ ஏடிஎம்.,மில் போலி ஏடிஎம் கார்டு பயன்படுத்தி அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்தான சிசிடிவி காட்சியை வைத்து கிருமாம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில் ஹரியானா கொள்ளையர்கள் கைவரிசை காட்டி தப்பிச் சென்றது தெரியவந்தது.

ஹரியானா கும்பல்

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் எஸ்பிஐ டெபாசிட் இயந்திரங்களை குறிவைத்து 1 கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஹரியானா சென்ற சென்னை தனிப்படை காவல்துறையினர் கொள்ளையில் ஈடுபட்ட அமீர் அர்ஷ், வீரேந்தர், நஜீப் ஹுசைன், சவுகத் அலி ஆகிய நான்கு பேரை கைது செய்து சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

இதில் முக்கிய குற்றவாளியான சவுகத் அலியை பெரியமேடு காவல்துறையினர் ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை

இந்த நிலையில் புதுச்சேரியில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனுக்கும், சவுகத் அலிக்கும் தொடர்புள்ளதா என்பதை விசாரிப்பதற்காக புதுச்சேரி கிருமாம்பாக்கம் உதவி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான நான்கு காவல்துறையினர் சென்னை பெரியமேடு காவல் நிலையத்திற்கு நேற்று (ஜூலை 6) வந்தனர்.

மேலும், காவலில் உள்ள சவுகத் அலியின் விவரங்கள் குறித்தும் கிருமாம்பாக்கம் காவல்துறையினர் சேகரித்தனர். கொள்ளையில் ஈடுபட்ட கும்பலின் புகைப்படத்தை சவுகத் அலியிடம் காண்பித்த போது இவர் யார் என்பது தெரியாது எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் புதுச்சேரி காவல்துறையினர் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். சவுகத் அலியின் கூட்டாளி இல்லை என உறுதி செய்த பின்னர் புறப்பட்டுச் சென்றனர். ஹரியானாவிற்கு விரைந்து கொள்ளையனைப் பிடிக்கும் முயற்சியில் உள்ளதாக புதுச்சேரி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி மாநில பட்ஜெட் ரூ.9250 கோடி - ஒன்றிய அரசுக்கு கோப்பு அனுப்பி வைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.