இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புதுச்சேரி ஜிப்மரில், வெளிப்புற நோயாளிகள் பிரிவில், சேவைகள் ஏப்ரல் 9ஆம் தேதிமுதல் முன்பதிவு முறையில் மட்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், கோவிட் தொற்று, மருத்துவமனை மூலம் பரவுவதைத் தடுக்கவும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவருவதன் காரணமாக நாள்தோறும் பல மருத்துவ கலந்தாலோசனைகள், உள் சுற்றறிக்கைகள் தேவைப்படுகின்றன.
தற்போதுவரை முன்பே அறிவித்தபடி முன்பதிவு செய்து தொலை மருத்துவச் சேவைக்குப் பிறகு தேவைப்படுபவர்களை மட்டும் நேரில் வரவழைத்து வெளிப்புற மருத்துவச் சேவைகள் வழங்கப்படும். முன்பதிவுக்கான தொலைபேசி எண்கள் குறித்த விவரங்களை www.Jipmer.edu.in என்ற இணையதளத்தில் பெறலாம்.
நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு துறையிலும் 100 நோயாளிகள் மட்டும் மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவ ஆலோசனைகள் பெற அனுமதிக்கப்படுவர். அனைவருக்கும் முன் அனுமதிக்கான கைப்பேசி குறுஞ்செய்தியை உறுதிசெய்த பின்னரே மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படுவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.