ETV Bharat / bharat

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்
author img

By

Published : Sep 22, 2021, 3:52 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் இன்று (செப்.22) அறிவித்துள்ளது.

அதன்படி புதுச்சேரி மாநிலத்திலுள்ள ஐந்து நகராட்சிகள், 10 கொம்யூன் (15 கிராம பஞ்சாயத்துகளை அடக்கியவை) பஞ்சாயத்துக்கான உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல்

இரண்டாம் கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்டோபர் 25ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்டோபர் 28ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 7ஆம் தேதி நிறைவடைகிறது.

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 11ஆம் தேதி நிறைவடைகிறது. மூன்றாம் கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15ஆம் தேதி நிறைவடைகிறது.

தயாராகவுள்ள வாக்காளர்கள்

மூன்றுகட்ட வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கடைசி ஒரு மணி நேரமாக மாலை 5 மணி முதல் 6 மணிவரை கரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

இந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 755 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அதில், 4 லட்சத்து 72 ஆயிரத்து 202 ஆண்கள், 5 லட்சத்து 30 ஆயிரத்து 930 பெண்கள், 117 திருநங்கைகள் அடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: 9 மாவட்டங்களுக்கு இறுதி வேட்பாளர் - அதிமுக அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.