புதுச்சேரி: புதுச்சேரியில் காந்தி சிலை அருகே அமைந்திருக்கும் கடற்கரையை பராமரிக்கும் வகையில் புதுச்சேரி அரசு பல கோடி ரூபாய் செலவழித்து மணல் திட்டுகளை உருவாக்கியது.
இந்த மணல் பரப்பை உருவாக்க தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. ட்ரெஜிங் பைப்புகள் மூலம் தூர்வாரும் மணல்கள் கடல் நீரின் மூலமாக இந்த கடற்கரையில் கொண்டு செல்லப்பட்டது.
இவற்றால் நாளுக்கு நாள் நெகிழிக் கழிவுகள் அதனுடன் கடலில் கலக்கின்றன. இதன் விளைவாக கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அதிகரித்து வரும் நெகிழிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் கடல் வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக கூறும் சமூக ஆர்வலர்கள் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்
இதையும் படிங்க: உணவில்லாமல் பிளாஸ்டிக் பொருள்களை உண்ணும் வனவிலங்குகள்: நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?