டெல்லி: தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வேட்பு மனுத்தாக்கல் நடந்து முடிந்த நிலையில், தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன், காங்கிரஸ் ப.சிதம்பரம், அதிமுக சிவி சண்முகம், தர்மர் ஆகியோர் தேர்வாகினர்.
ஆகவே மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கும், கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 4 இடங்களுக்கும், ஹரியானாவில் 2 இடங்களுக்கு மட்டுமே இன்று (ஜூன் 10) தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதனிடையே கர்நாடகா சட்டப் பேரவையில் நடந்துவரும் வாக்குப்பதிவில் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் ஸ்ரீனிவாச கவுடா, தனது கட்சியைச் சேர்ந்தவருக்கு வாக்களிக்காமல், காங்கிரஸ் கட்சி உறுப்பினருக்கு வாக்களித்தார்.
இதனால் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீனிவாச கவுடா தெரிவிக்கையில், "எனக்கு காங்கிரஸ் கட்சிப் பிடிக்கும். அதனாலேயே காங்கிரஸ் உறுப்பினருக்கு வாக்களித்தேன்" என்றார்.
இதையும் படிங்க: இந்தியா-நேபாளம் இடையே ஆன்மீக சுற்றுலா ரயில்: ரயிலின் சிறப்பம்சங்கள் என்ன?