டெல்லி: பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதி ஜனவரி 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும், உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், மணிப்பூர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் இன்று (பிப். 14) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரகாண்டில் 70 தொகுதிகளும், கோவாவில் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 55 தொகுதிகளில் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில், முதல்கட்டமாக பிப். 10ஆம் தேதி 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்டாலினுடன் மம்தா உரையாடல்: விரைவில் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் கூட்டம்