ETV Bharat / bharat

வாஜ்பாய் 4ஆம் ஆண்டு நினைவு நாள்... குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை - President Murmu

முன்னாள் பிரமதர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

வாஜ்பாய் 4ஆம் ஆண்டு நினைவு நாள்
வாஜ்பாய் 4ஆம் ஆண்டு நினைவு நாள்
author img

By

Published : Aug 16, 2022, 8:47 AM IST

Updated : Aug 16, 2022, 9:14 AM IST

டெல்லி: பாஜகவை நிறுவியவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் வயது மூப்பு காரணமாக 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி உயிரிழந்தார். அவரது 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆக. 16) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' என்னும் வாஜ்பாயின் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பங்கேற்று வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தினர்.

வாஜ்பாய் மூன்று முறை பிரதமராக பதவி வகித்துள்ளார். முதல் முறையாக 1996ஆம் ஆண்டு 13 நாள்களும், அதன் பின்னர் 1998 முதல் 1999ஆம் ஆண்டு வரை 13 மாதங்களும் பிரதமராக இருந்தார். அதைத்தொடர்ந்து 1999 முதல் 2004ஆம் ஆண்டு வரையும் பிரதமராக பதவி வகித்துள்ளார்.

அவரது தன்னலமற்ற உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.1994ஆம் ஆண்டு, அவர் இந்தியாவின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதைப் பெற்றார். தொடர்ந்து 2015ஆம் ஆண்டில், நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னாவும் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்திய அரசியலில் வாஜ்பாயின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக, அவரது பிறந்த நாளை (டிச. 25) நாடு முழுவதும் நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க: அட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வில் கர்ஜித்த பாதுகாப்பு படை வீரர்கள்

Last Updated : Aug 16, 2022, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.