உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஃபிக். இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
உடனே வீட்டின் அருகே இருந்தவர்கள், காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அத்தகவலின் அடிப்படையில் காவலர்கள் கஜேந்திர பால் சிங், சமர் சிங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, இருவரையும் சமாதானம் செய்ய முயன்றனர்.
அப்போது காவலர்களை ரஃபிக்கின் குடும்பத்தினர் செங்கல், கற்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நிலையில் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், ''காவலர்களைத் தாக்கியவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.