ETV Bharat / bharat

காங்., தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் அலுவலகத்தில் போலீஸ் சோதனை - காங்கிரஸ் கண்டனம்!

தெலங்கானாவில் காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோலுவின் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் எழுப்பியுள்ளனர்.

police
police
author img

By

Published : Dec 14, 2022, 4:06 PM IST

ஹைதராபாத்: 2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி காங்கிரஸ் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளராக சுனில் கனுகோலு நியமிக்கப்பட்டார். காங்கிரஸின் 2024 தேர்தலுக்கான பணிக்குழுவில் சுனில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று(டிச.13) தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில் உள்ள தேர்தல் வியூக வகுப்பாளர் சுனிலின் "மைண்ட் ஷேர் அனலடிக்ஸ்" அலுவலகத்தில் போலீசார் திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சுனில் குழு வைத்திருக்கும் சமூக வலைதளப் பக்கங்களை போலீசார் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சோதனை திட்டமிட்ட சதி என்றும், இதில் தங்களது முக்கிய தகவல்கள் திருடப்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விவகாரத்தை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தெலங்கானா அரசு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளதாகவும், அதில் போலீசார் முக்கியத் தகவல்களை சட்டவிரோதமாக எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு:இந்தியாவை யாராலும் கைப்பற்ற முடியாது - அமித்ஷா

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.