புதுச்சேரி: நோணாங்குப்பம் பேரடைஸ் கடற்கரையில் நேற்று (ஆக. 1) மதியம் பெங்களூருவில் படித்துக் கொண்டிருக்கும் சூடான் நாட்டைச் சேர்ந்த இளைஞர் அலாவுதீன், அவரது நண்பர்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.
தேடுதல் பணி
அலாவுதீன் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட அலையில் சிக்கி, அவர் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டார். இது குறித்து அருகிலிருந்த அவரது நண்பர்கள் இருவரும் கூச்சலிட்டனர். தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருந்தபோதும் அலையில் சிக்கிய அலாவுதீன் காணாமல்போனதால் இது குறித்து தவளைகுப்பம் காவல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து தவளகுப்பம் காவலர்கள், கடலோர காவல் படை வீரர்கள் இளைஞரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி'