ETV Bharat / bharat

கணவரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய மனைவி? - திடுக்கிடும் பின்னணி! - கணவரை கொலை செய்ய சதி

லிஃப்ட் கொடுத்த நபர், விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில், கொலையுண்டவரின் மனைவிக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும், இந்த கொலை திருமணத்தை மீறிய உறவால் திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Police
Police
author img

By

Published : Sep 22, 2022, 3:32 PM IST

கம்மம்: தெலங்கானாவில் இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபருக்கு லிஃப்ட் கொடுத்த ஜமால் என்பவர், விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், வழக்கில் பல திடுக்கிடும் தகவல்களைப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிந்தகனி மண்டலத்தைச் சேர்ந்த மூன்று பேர் முன் கூட்டியே திட்டமிட்டு, ஜமாலை கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஊசி வழியாக அதிகளவு மயக்க மருந்து கொடுத்து கொலை செய்துள்ளதாகவும், இதில் மருத்துவர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதில் சம்மந்தப்பட்ட மூவரும் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களைத்தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலைக்கு திருமணத்தை மீறிய உறவுதான் முக்கியக்காரணம் என சந்தேகம் இருப்பதாகவும், ஜமாலின் குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில், ஜமாலின் மனைவி குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் பல முறை பேசியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதனால், ஜமாலின் கொலையில் அவரது மனைவிக்கு சம்மந்தம் இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பைக்கில் லிஃப்ட் கொடுத்தவரை ஊசிபோட்டு கொன்ற கும்பல் - கொலைகாரர்களைத் தேடும் போலீஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.