இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா யார்க்ஷெரி மாகாணத்திற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளனர்.
மிக்லிகெட் பார் பகுதியில் சென்ற போது. அவர்களை வரவேற்க ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் சார்லஸ் - கமிலா தம்பதியை நோக்கி முட்டை வீசினார். ஆனால் அந்த முட்டை அந்த தம்பதி மீது விழாமல் தரையில் விழுந்தது.
முட்டை வீசியபோது அந்த நபர் 'அடிமைகளின் ரத்தத்தால் இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது' என்று கூச்சல் எழுப்பியபடி முட்டைகளை வீசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
இதனை தொடர்ந்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் 23 வயதான கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது.
- https://twitter.com/AFP/status/1590432536907288577?t=nUfafoG4dwejQOmrAE_BnA&s=08
இதுதொடர்பான வீடியோவில் முட்டைகள் கீழே சிதறி கிடப்பதும், இளைஞர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து இழுத்து செல்வதும் காண முடிகிறது.
இதையும் படிங்க : 'தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு' - ஆளுநர் தமிழிசை பகீர் புகார்!