தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் மாரிகுடா பகுதியில் காவலராகப் பணியாற்றிவந்தவர் சைதுலு. இவர் இன்று (மார்ச் 30) காலை ரங்காரெட்டியில் யச்சரம் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து திருமணத்திற்கு வற்புறுத்திய நபர் கைது