தெலங்கானா மாநிலம் ஜக்தியல் மாவட்டத்தில் லோத்துனூர் கிராமத்தில் சேவல் பந்தயம் நடத்திட உள்ளூர்வாசிகள் ஏற்பாடு செய்துள்ளனர். பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக, கொண்டப்பூர் பகுதியைச் சேர்ந்த தனுகுலா சதீஷ் , தன் சேவலுடன் வந்துள்ளார். பந்தயம் பார்க்க மக்கள் திரண்டதால், அப்பகுதியே விழாக்கோலம் போல் காட்சியளித்துள்ளது.
இந்நிலையில், சதீஷ் தன் சேவலை பந்தயத்தில் இறக்குவதற்காகக் காலில் கத்தியை கட்டியுள்ளார். அதிகப்படியான மக்கள் குவிந்ததால், சேவல் பயத்தில் அங்கிருந்து ஓட முயன்றுள்ளது. உடனடியாக சதீஷ் அதை அழுத்திப் பிடித்திட முயற்சி செய்துள்ளார். அப்போது, காலிலிருந்த கத்தி, சதீஷின் ஆணுறுப்பை வெட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் அதிகளவில் வெளியாகியுள்ளது. உடனடியாக, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், சதீஷ் உயிரிழப்புக்கு அவர் வளர்த்த சேவல்தான் காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, சேவலை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். அதுக்கு தேவையான உணவுகளை, காவலர்கள் வழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: பேய் விரட்ட பெண்ணின் இருதயத்தை உருளைக்கிழங்குடன் வதக்கிச் சாப்பிட்ட கொடூரம்!