ஆந்திராவில் உள்ள சேஷாசலம் என்னும் காட்டுப்பகுதி உள்ளது. அங்குள்ள மங்களம் பகுதியில் சிலை புதையல் தேடி, ஒரு குழுவினர் செல்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்து.
தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், மங்களத்தில் இருந்து சுமார் 6 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள சுரங்கப்பாதையை காவல் துறை அடைந்தனர்.
அப்போது, காட்டில் 80 அடி சுரங்கப்பாதையை தோண்டிக் கொண்டிருந்த ஏழு பேரை காவல் துறையினர் கண்டறிந்தனர். பின்னர் அவர்கள் 7 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரெம்டெசிவிர் மருந்தை இணைதளத்தில் பதிவு செய்து பெறலாம்