இந்தியாவின் கிழக்குக் கடற்கரை மாநிலங்களில், 'யாஸ்' புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புயல் பாதிப்பில் சிக்கி 21 லட்சம் பேர், தங்கள் குடியிருப்பிலிருந்து வெளியேறி, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாதிப்புகள் குறித்து பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி, இரு மாநிலங்களுக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
முதலில் ஒடிசா செல்லும் பிரதமர் மோடி, அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பலசோர், பத்ராக், மேதினிபூர் ஆகிய பகுதிகளை விமானம் மூலம் ஆய்வு செய்கிறார். பின்னர் மேற்கு வங்கம் செல்லும் அவர், தலைநகர் கொல்கத்தாவில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதையும் படிங்க: கறுப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகளைத் தொடர்ந்து பச்சை பூஞ்சை....