குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி, வீடியோ கான்பரன்சிங் மூலம் அந்த மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "மருத்துவமனையை கட்ட 201 ஏக்கருக்கு மேல் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையை கட்ட 1,195 கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் மத்தியில் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 750 படுக்கை வசதிகளுடன் கட்டப்படவுள்ள மருத்துவமனையில் ஆயுஷ் பிரிவுக்கு என 30 படுக்கைகள் கூடுதலாக ஒதுக்கப்படவுள்ளது. 125 மருத்துவ இடங்கள், 60 செவிலியர் இடங்கள் அடங்கிய மருத்துவ கல்லூரியாகவும் செயல்படவுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.