ETV Bharat / bharat

ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா: பிரதமர் மோடி - இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா பிரதமர் மோடி தொடங்கி வைப்பு

டெல்லி: ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.22) தொடங்கி வைக்கிறார்.

PM
PM
author img

By

Published : Dec 22, 2020, 9:44 AM IST

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம், விஞ்ஞான் பாரதி சார்பில் ஆண்டுதோறும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நடத்தப்படுகிறது.

மக்களிடையே அறிவியல் உணர்வைத் தூண்டவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் பங்களிப்பை எடுத்துக்காட்டவும், அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்ற உத்தியைக் கட்டமைப்பதும், இவ்விழாவின் நோக்கமாகும்.

இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக, ஆறாவது இந்தியா சர்வதேச அறிவியல் விழா டிசம்பர் 22 முதல் 25 வரை இணையவழியில் நடைபெறுகிறது. இதனைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று(டிச.22) பிற்பகல் 4.30 மணிக்குக் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பங்கேற்கின்றார்.

இந்த அறிவியல் திருவிழாவின் நிறைவு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்கவுள்ளார். ராமானுஜனின் 133ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்றும், முன்னாள் பிரதமரும், மறைந்த பாஜக மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் 96ஆவது பிறந்தநாளை முன்னிட்டும், 25 ஆம் தேதி இந்நிகழ்ச்சி நிறைவடையும் என அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இவ்விழாவில், விஞ்ஞானிகள், விவசாயிகள், அறிவியலாளர்கள், பெண்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் பங்கேற்க உள்ளதாக, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள் தன்னம்பிக்கை இந்தியா, சர்வதேச நலன் தொடர்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.