டெல்லி: கரோனா இரண்டாம் அலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ள நிலையில், மூன்றாம் அலை வரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
அமைச்சரவைக் கூட்டம்
இதுகுறித்து இன்று மாலை நடைபெறும் (ஜூன்.30) காணொலிக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிக்கிறார்.
அதில் மூன்றாம் அலை ஏற்படும்பட்சத்தில், அதனை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கக்கூடும் என்றும்;
அதேபோல், சாலைப்போக்குவரத்து, விமானம் மற்றும் தொலைத் தொடர்புத்துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பூஞ்சைகளின் வரிசையில் கரோனா நோயாளிகளை தாக்கத் தொடங்கியுள்ள ’சைட்டோமேகுலோ’ வைரஸ்!